தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ள 16 பேரில் ஒருவர் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என காவல்துறை தகவல்

Kanimoli
3 years ago
 தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ள 16 பேரில் ஒருவர் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என காவல்துறை தகவல்

இலங்கையில் இருந்து கடந்த இரு நாட்களில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ள 16 பேரில் ஒருவர் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இருந்து நேற்றும் இன்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலையை சேர்ந்த 06 குடும்பங்கள் தமிழகம் தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர்.

குறித்த 06 குடும்பங்களை சேர்ந்த 16 பேரிடமும் தமிழக கடலோர காவல் படையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 16 நபர்களில் ஒருவர் கிளிநொச்சி பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றினை உடைத்து நகைகளை கொள்ளையடித்த குற்ற செயலின் பிரதான சந்தேக நபர் என கண்டறிந்துள்ளனர்.

குறித்த நபர் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள நிலையில் இலங்கையில் இருந்து தமிழகம் தப்பி சென்றுள்ளார் என காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4