குரங்கு அம்மை நோய்க்கான வைரஸ் வீடுகளில் இருக்கும் பொருட்களில் நீண்ட நாட்களாக இருக்கும் - ஆய்வில் அதிர்ச்சி

#MonkeyPox
Prasu
3 years ago
குரங்கு அம்மை நோய்க்கான வைரஸ் வீடுகளில் இருக்கும் பொருட்களில் நீண்ட நாட்களாக இருக்கும் - ஆய்வில் அதிர்ச்சி

ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் பரவி வந்தது. அந்த நோய் தற்போது, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உட்பட சுமார் 92 க்கும் அதிகமான நாடுகளில் பரவிக் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், குரங்கு வைரஸ் குறித்த ஒரு புதிய ஆய்வில் கிருமி நீக்கம் செய்தாலும் குரங்கு அம்மை வைரஸானது, வீடுகளில் இருக்கும் பொருட்களில் நீண்ட நாட்கள் இருக்கும் என்று தெரியவந்திருக்கிறது.

ஆனால், அதன் மூலம் நோய் பரவுமா? என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. குரங்கு அம்மை நோயால் பாதிப்படைந்த இரண்டு நபர்கள் இருக்கும் வீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அதன்படி, கிருமி நீக்கம் செய்த பின்பும் அவர்கள் தொடர்பில் இருந்த பகுதிகளில் 70% வைரஸ் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4