வைரல் ஆகும் பிரிவுக்கு பிறகு நிகழ்ச்சி ஒன்றில் தனுஷும் ஐஸ்வர்யாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்

#TamilCinema #Actor
Prasu
3 years ago
 வைரல் ஆகும் பிரிவுக்கு பிறகு நிகழ்ச்சி ஒன்றில் தனுஷும் ஐஸ்வர்யாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்

பிரிவுக்கு பிறகு நிகழ்ச்சி ஒன்றில் தனுஷும் ஐஸ்வர்யாவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இருவரும் மௌனம் காத்துவருகின்றனர். இந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்வில் இருவரும் கலந்துகொண்டனர். யாத்ரா தனது பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அப்போது தங்கள் மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் இயல்பாக தங்களது மகனை அணைத்த படி இருக்கின்றனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரிவுக்கு பிறகும் கூட தங்களது மகனை உற்சாகப்படுத்தும்விதமாக தனுஷ் - ஐஸ்வர்யா இணைந்து கலந்துகொண்டது அவர்களை நல்ல பெற்றோர்களாக அடையாளம் காட்டுவதாக ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4