யாழில் அதிக விலைக்கு முட்டை விற்ற மூவருக்கு எதிராக அதிகார சபையினரால் வழக்கு தாக்கல்

#SriLanka #Arrest
Prasu
3 years ago
யாழில் அதிக விலைக்கு முட்டை விற்ற மூவருக்கு எதிராக அதிகார சபையினரால் வழக்கு தாக்கல்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கோழி முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் வெள்ளை நிற முட்டை 43 ரூபாவும் , சிவப்புபு நிற முட்டை 45 ரூபாவுக்கு விற்பனை செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் முட்டைகளின் விலைகளை கட்டுப்பாட்டு விலைக்குள் விற்காது அதிக விலைக்கு வர்த்தகர்கள் விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் , யாழ். மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் திங்கட்கிழமை (22) யாழ்ப்பாணம் , திருநெல்வேலி , கல்வியங்காடு போன்ற பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். 

அதன் போது,  அதிக விலைக்கு கோழி முட்டை விற்பனை செய்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் , எதிர்வரும் காலங்களில் வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4