இலங்கையில் எரிபொருளைக் கொள்வனவு செய்வதே மிகப் பெரிய மோசடி! திஸ்ஸ அத்தநாயக்க

Mayoorikka
3 years ago
இலங்கையில் எரிபொருளைக் கொள்வனவு செய்வதே மிகப் பெரிய மோசடி!  திஸ்ஸ அத்தநாயக்க

இலங்கையில் எரிபொருளைக் கொள்வனவு செய்வதே மிகப் பெரிய மோசடி என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சி அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவது போல் நடித்து, துபாய் மாநிலத்தில் உள்ள நிறுவனம் மூலம் தரம் குறைந்த கச்சா எண்ணெய் கொள்வனவு செய்யப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

"இலங்கையில் நடக்கும் மிகப்பெரிய மோசடி எரிபொருள் கொள்வனவு என்றுதான் சொல்ல வேண்டும். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கியதாக விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், நேரடியாக ரஷ்ய நிறுவனத்திடம் எண்ணெய் வாங்கவில்லை. விநியோகம் மட்டும்தான் அந்த நிறுவனம் செய்கிறது. துபாயில் அமைந்துள்ள கொரல் எனர்ஜி என்ற நிறுவனத்தின் ஊடாகதான் எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. நீண்ட கால ஒப்பந்தத்தின் கீழ் ரஷ்ய யுரல் கச்சா எண்ணெய் பேரலுக்கு 35 முதல் 50 டொலர் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்படியிருக்கையில் எப்படி 117க்கு வாங்க முடியும்?...இந்த கொள்முதலை பின்பற்றியது யார்? செயல்முறை செய்து ஒப்புதல் அளித்தது யார்?.. டெண்டர் அழைப்பு எப்படி நடந்தது? இவைதான் கேள்விகள்.. இதைப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கோபா, கோப் குழுக்களிலும் இதுபற்றி கேள்விகளை எதிர்பார்க்கிறோம். அதைச் செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4