ஜனநாயக வழியில் போராடிய, போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது பாரதூரமானது -மலையக சிவில் அமைப்புகளின் கூட்டணி

Kanimoli
3 years ago
ஜனநாயக வழியில் போராடிய, போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது பாரதூரமானது  -மலையக சிவில் அமைப்புகளின் கூட்டணி

ஜனநாயக வழியில் போராடிய, போராட்டக்காரர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது பாரதூரமான விடயமாகும். எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் என மலையக சிவில் அமைப்புகளின் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மேற்படி கூட்டமைப்பின் தலைவர் கணேசலிங்கம் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், " நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது. மக்கள்மீது சுமைகள் திணிக்கப்பட்டன. எனவே, நாட்டை மீட்கவும், அரசியல் மற்றும் ஜனநாயக மறுசீரமைப்புகளை கோரியுமே மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.

ஜனநாயக வழியில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் விளையாக முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு பதவி விலக வேண்டி ஏற்பட்டுள்ளது. போராட்டத்தால் தான் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார்.

எனினும், பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி, போராட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு அவர் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கமைய பல்கலைக்கழக மாணவர்களும் அந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட வேண்டியவர்கள் சுமந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால் நீதிக்காக போராடியவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். எனவே, கைதுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.

வன்முறையில் ஈடுபட்டவர்களை தண்டிக்கலாம். ஆனால் ஜனநாயக வழியில் போராடியவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அதேவேளை, மலையக சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்

பொருளாதார சிக்கலை பயன்படுத்தி மலையக சிறார்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சிறுமி ரமணியின் மரணத்தை சாதாரணமாக கருதிவிட முடியாது" எனவும் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4