கொடிகாமம் சந்தைக்கு தேங்காய் கொள்வனவு செய்ய பேருந்தில்சென்ற மூதாட்டி திடீர் நெஞ்சு வலி காரணமாக பலி

Kanimoli
3 years ago
 கொடிகாமம் சந்தைக்கு தேங்காய் கொள்வனவு செய்ய பேருந்தில்சென்ற மூதாட்டி திடீர் நெஞ்சு வலி காரணமாக பலி

  யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் சந்தைக்கு தேங்காய் கொள்வனவு செய்ய பேருந்தில்சென்ற மூதாட்டி திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த செபநாயகம் செல்வமலர் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த மூதாட்டி நேற்றையதினம் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு பேருந்துக்குள் மயங்கி சரிந்துள்ளார்.

அதனை அடுத்து சாரதி பேருந்தில் மூதாட்டியை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் , மூதாட்டி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

இந்நிலையில் மூதாட்டியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4