மனித எச்சங்களை ஒப்படைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவு

Mayoorikka
3 years ago
மனித எச்சங்களை ஒப்படைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவு

திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் பொதியிடப்பட்ட நிலையில், மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என மன்னார் நீதவான் இன்று உத்தரவிட்டார்.

திருக்கேதீஸ்வரம்  மனிதப் புதைகுழி வழக்கு இன்று மன்னார் நீதவான் A.S.ஹிபதுல்லா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.


அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள மனித எச்சங்களை மீண்டும் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும், அதன் பின்னர் நீதவான் முன்னிலையில் அவற்றை பிரித்தெடுத்து, மாதிரிகளை பகுப்பாய்விற்கு உட்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் மன்னார் நீதவான் இன்று கட்டளை பிறப்பித்தார்.

இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4