நல்லூரில் பக்தர் போல பாசாங்கு செய்து ஏனைய பக்தர்களிடம் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் பொலிஸாரால் கைது

Kanimoli
3 years ago
நல்லூரில் பக்தர் போல பாசாங்கு செய்து ஏனைய பக்தர்களிடம் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் பொலிஸாரால் கைது

நல்லூரில் பக்தர் போல பாசாங்கு செய்து ஏனைய பக்தர்களிடம் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நல்லூர் கந்தசாமி ஆலய மகோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், ஆலயத்துக்குள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரை ஆலயத்திற்குள் கடமையிலிருந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் பக்தர்களிடம் நூதனமாக திருடிய வங்கி அட்டையை பயன்படுத்தி ஆலயத்துக்கு அருகில் உள்ள புடவை விற்பனை நிலையத்தில் ஆடைகளை கொள்வனவு செய்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார் கண்காணிப்பு கமராவின் உதவியுடன் குறித்த நபரை கைது செய்த நிலையில், யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4