அதிசய நிகழ்வு ”இரு வேறு தம்பதியினருக்கு பிறந்த ஒரே மாதிரியான குழந்தைகள்”-வியந்து பார்க்கும் மக்கள்

Prasu
3 years ago
அதிசய நிகழ்வு ”இரு வேறு தம்பதியினருக்கு பிறந்த ஒரே மாதிரியான குழந்தைகள்”-வியந்து பார்க்கும் மக்கள்

இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டை சகோதரர்களுக்கு இரட்டையர்களாக குழந்தை பிறந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது இரு வேறு தம்பதியினருக்கு பிறந்த குழந்தைகள் எப்படி ஒரே மாதிரியாக இருக்கின்றார்கள் என பலரையும் வியப்படைய செய்திருக்கின்றது. 

இரட்டை சகோதரிகளான பிரிட்டனி, ப்ரியான டீன் ஆகிய இருவரும் இரட்டை சகோதரர்களான ஜோஸ் மற்றும் ஜெரமி சால்யெர்ஸை கடந்த 2017 ஆம் வருடம் நடைபெற்ற இரட்டையர்கள் திருவிழாவில் சந்தித்துள்ளனர். 35 வயதான சால்யர்ஸ் சகோதரர்கள் 33 வயதான டீன் சகோதரர்களிடம் ப்ரப்போஸ் செய்திருக்கின்றார்கள்.

அமெரிக்கா விர்ஜீனியா மாகாணத்தில் வாழும் இவர்கள் கடந்த 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் வருடம் அந்த சகோதரிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக ஒரே நேரத்தில் பிரசவித்துள்ளனர். இந்த சூழலில் 2021 பிப்ரவரி மாதத்தில் ஜெரமிக்கு குழந்தை பிறந்துள்ளது. 

இதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் ஜோஷ்க்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த இரண்டு குழந்தைகளும் இரட்டையர்களாக இருப்பார்களா என எதிர்பார்த்து இருந்த அந்த தம்பதிகளுக்கு அவர்கள் நினைத்தது போலவே நடைபெற்றுள்ளது. 

அந்த புகைப்படத்தை அவர்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கின்றனர். இந்த அதிசய நிகழ்வை பலரும் வியப்புடன் பார்த்து வருகின்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4