யாழில் வீடொன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் கைது

#Jaffna #drugs #Women #Arrest
Prasu
3 years ago
யாழில் வீடொன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் கைது

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரண்டு பெண்களை திங்கட்கிழமை இரவு  பொலிஸார் கைது செய்ததுடன், அவர்கள் வசமிருந்த இரண்டு கிராம் போதைப் பொருளையும் கைப்பற்றினார்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் உள்ள பாழடைந்த  வீடொன்றில் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருப்பதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த இரண்டு பெண்களும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் போதைத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சாயிமேனன் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.

28 மற்றும் 29 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன், விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4