தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை - ரணில் விக்ரமசிங்க

Kanimoli
3 years ago
தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை - ரணில் விக்ரமசிங்க

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டுள்ளதாவும், தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினை நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததும் அது குறித்து நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

செப்டம்பர் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி 12 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வரி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பணம் அச்சிடுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வரி சேகரிப்பை ஒழுங்குபடுத்தி அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் 2022 டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4