சுற்றுலா சென்ற 7 வயது சிறுமி மீது 200 கிலோ கற்சிலை விழுந்ததால் பரிதாபமாக உயிரிழப்பு

#Death
Prasu
3 years ago
சுற்றுலா சென்ற 7 வயது சிறுமி மீது 200 கிலோ கற்சிலை விழுந்ததால் பரிதாபமாக உயிரிழப்பு

முனிச்சில் விடுமுறையிலிருந்த இத்தாலியக் குடும்பம், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த 200 கிலோ (440-பவுண்டு) எடையும், 4 அடி 7 அங்குல உயரம் கொண்ட பளிங்கு கற்சிலை குழந்தையின் மேல் விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இது குறித்து தகவல் வெளியிட்ட ஜேர்மன் காவல்துறை கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளனர். 

ஹோட்டலின் முற்றத்தில் சிறுமியின் மீது சிலை விழுந்தது. ஆனால் 200 கிலோ எடையுள்ள அந்த சிலை அவர்மீது விழுந்ததற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

இருப்பினும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களின்படி, சிறுமி இத்தாலியின் Naples நகரத்தைச் சேர்ந்த Lavinia Trematerra என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

சிறுமி அவரது பெற்றோர்களுடன் விடுமுறைக்கு ஜேர்மனி வந்துள்ளார். இந்த சம்பவ இடத்தில் இருந்தவர்கள் குழந்தையை சிலைக்கு அடியிலிருந்து விடுவிக்க உதவினர் மற்றும் அவசர சேவையை அழைத்துள்ளனர். 

மேலும் அவசர சேவை மருத்துவர்கள் வந்தனர், பின்னர் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்துள்ளர் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4