கொழும்பு வங்கி ஒன்றில் சுமார் 2 கோடி ரூபாய் பணத்தை வைப்புச் செய்த பெண் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது

Kanimoli
3 years ago
 கொழும்பு வங்கி ஒன்றில் சுமார் 2 கோடி ரூபாய் பணத்தை வைப்புச் செய்த பெண் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது

 கொழும்பு வங்கி ஒன்றில் சுமார் 2 கோடி ரூபாய் பணத்தை வைப்புச் செய்ததுடன், வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் நகைகளை வைத்த பெண் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளார். கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த பெண்ணே சட்டவிரோத சொத்துச் சேர்ப்பு சந்தேகத்தில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

6 இலட்சம் ரூபா நிலையான வைப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு என்பவற்றில் குறித்த தொகை வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் வங்கிக் கிளையொன்றின் பாதுகாப்புப் பெட்டகத்தில் 60 பவுண்களுக்கும் அதிகமான தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4