ஆசியாவிலே மிக உயரமான கட்டடம் என அழைக்கப்படும் கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் திறக்கப்படவுள்ளது - அதிபர் செயலகம்

Kanimoli
3 years ago
ஆசியாவிலே மிக உயரமான கட்டடம் என அழைக்கப்படும் கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் திறக்கப்படவுள்ளது - அதிபர் செயலகம்

ஆசியாவிலே மிக உயரமான கட்டடம் என அழைக்கப்படும் கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் திறக்கப்படவுள்ளதாக அதிபர் செயலகம் அறிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் தாமரை கோபுரம் வணிக நடவடிக்கைக்காக திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை மக்களுக்காக சாதாரண கட்டணம் 500 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கான வரம்பற்ற கட்டணம் 2000 ரூபாயாகும்.

அதேவேளை, வெளிநாட்டவர்களுக்கான கட்டணம் 20 அமெரிக்க டொலர்கள் எனவும் அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது. சீனா அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இந்த கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதன் நிர்மாணப் பணிகள் முடிவடைந்து நீண்ட காலம் சென்றுள்ள நிலையில், அதனை திறக்கும் நடவடிக்கை தாமதமாகி உள்ள நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

அதேவேளை, பல மில்லியன் டொலர் செலவிடப்பட்ட இக்கோபுரமானது முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4