போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேர் பிணையில் விடுதலை!

Mayoorikka
3 years ago
போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேர் பிணையில் விடுதலை!

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 28 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் சில செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருதானை – டெக்னிக்கல் சந்தி பகுதியில் நேற்று மாலை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தினை கலைப்பதற்கு பொலிஸாரினால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தனர்.

இதன்காரணமாக பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், 28 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4