இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வாக்களிப்பது தொடர்பில் சஜித் மற்றும் டலஸ் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

Mayoorikka
3 years ago
இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வாக்களிப்பது தொடர்பில் சஜித் மற்றும் டலஸ் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

இன்று நடைபெறவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வாக்களிப்பதை தவிர்க்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதனை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் உறுதிப்படுத்தினார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழுவும் இன்று நடைபெறவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வாக்களிப்பதை தவிர்க்க தீர்மானித்துள்ளது.

இதனை பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் தமது தீர்மானத்தை வெளியிடவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4