இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Kanimoli
3 years ago
இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில்  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

காலி முகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட மேலும் பலர் இணைந்து பத்தரமுல்லையில் உள்ள தியதஉயன பகுதியில் இந்த சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

கறுப்பு உடைகள் அணிந்து போராட்டக்காரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

மக்களுக்கு நீதி  வேண்டும்! விலைகள் குறைக்கப்பட வேண்டும்..
இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களுக்கு நிவாரணம் வழங்காத இந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற தொணிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும், பிரதான உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என தெரிவித்தும்,  விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

மேலும், பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட காலி முகத்திடல் போராட்டக்காரர்களை விடுதலை செய்யக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4