நாளை பதவிப்பிரமாணம் செய்யவுள்ள அமைச்சர்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் விசேட கலந்துரையாடல்

Prathees
3 years ago
நாளை பதவிப்பிரமாணம் செய்யவுள்ள அமைச்சர்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் விசேட கலந்துரையாடல்

தற்போதைய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் குழுவொன்று நாளை சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திட்டமிட்டபடி 40 பேர் கொண்ட குழு நாளை பதவியேற்க உள்ளது.

எவ்வாறாயினும் நாளை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பதவியேற்கவுள்ள இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4