தந்தையின் வானில் சிக்குண்ட சிறுவன் பலி

Kanimoli
3 years ago
தந்தையின் வானில் சிக்குண்ட சிறுவன் பலி

திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தையின் வானில் சிக்குண்ட சிறுவன் பலியான துயர சம்பவம் ஒன்று இன்று (07) இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தந்தை, திருமண வைபவத்துக்கு செல்வதற்காக வானை பின்னால் எடுத்த போது அதற்குள் சிக்குண்டு ஸ்தலத்தில் சிறுவனான மகள் பலியானதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் தம்பலகாமம் நாயன்மார் திடலை சேர்ந்த ஆர்.நசிட்றா வயது (02) என காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த வான் தம்பலகாமம் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த சிறுமியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4