விடுவிக்கப்படும் நிலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது புதிய வழக்குகள்? செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு

Mayoorikka
3 years ago
விடுவிக்கப்படும் நிலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது புதிய வழக்குகள்? செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு

விடுவிக்கப்படும் நிலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது புதிய வழக்குகள் தொடரப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் c இன்று சபையில் தெரிவித்துள்ளார்.

இன்றும் சில அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருப்பதாக அறியக்கிடைத்தது.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அக்கிராசன உரையில், சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் விடுவிப்பு குறித்து தெரிவித்திருந்தார்.

அதற்கு பிந்திய எமது சந்திப்பிலும் அதனை அவர் உறுதி செய்திருந்தார். அரசியல் கைதிகளை விடுவிக்க ஆர்வமும் அவரிடத்தில் காணப்பட்டது.

எவ்வாறாயினும், வழக்கு தீர்க்கப்பட்டு பொதுமன்னிப்பில் அவர்களை விடுதலை செய்யக்கூடிய இயலுமை காணப்படுகின்ற போதிலும், அவர்கள் மீது புதிய வழக்குகள் தொடரப்படுகின்றன.

இவர்கள் சிறையிலேயே மரணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறான வழக்குகள் தொடரப்படுகின்றனவா என்ற ஐயங்களும் தோற்றுகின்றன. எனவே, இது குறித்து ஜனாதிபதி உரிய அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4