குருநாகல் பாடசாலை மாணவன் வடிகாலில் விழுந்து உயிரிழந்தமை ; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகள் முன்னெடுப்பு

Prasu
3 years ago
குருநாகல் பாடசாலை மாணவன் வடிகாலில் விழுந்து உயிரிழந்தமை ; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகள் முன்னெடுப்பு

குருநாகல்  பகுதியில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வீதியின் வடிகாலில் விழுந்து மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

குருநாகல் மலியதேவி கல்லூரியில் தரம் 9 கல்வி பயிலும் சஜித குணரத்ன எனும் மாணவர் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பாதையில் வாகனம் ஒன்றிற்கு இடமளிப்பதாக வீதியின் ஓரத்திற்கு சென்ற போது அருகில் இருந்த வடிகானில்  தவறி விழுந்து  உயிரிழந்து இருந்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று முன்தினம் சம்பவ  இடத்திற்கு   சென்று அங்கு ஆராய்ந்து உள்ளதோடு வாக்கு மூலங்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி பாடசாலை முடிந்து பலத்த மழைக்கு மத்தியில் மீண்டும் வீடு நோக்கி பயணித்து கொண்டிருந்த மாணவன் சஜித குணரத்ன  வடிகாலில்   தவறி விழுந்து உயிரிழந்தார்.

இந்த இடத்தில் மேலும் பல ஆபத்தான இடங்கள் இருப்பதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளார்கள்.

உயிரிழந்த சஜிதவின் இறுதி கிரியைகள் நேற்று பிற்பகல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4