கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற அரச எதிர்ப்பு வன்முறைகளுடன் தொடர்புடைய மேலும் 7 பேர் கைது

Prasu
3 years ago
கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற அரச எதிர்ப்பு வன்முறைகளுடன் தொடர்புடைய மேலும் 7 பேர் கைது

மே 9 வன்முறைகளுடன் தொடர்புடைய மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் 07 புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நடைபெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய மேலும் 7 பேர்  வீரம்புகெதர பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

வீரம்புகெதர பொலிஸ் பிரிவு மற்றும் தலங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின்  வீடு மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் உட்பட வீட்டிற்குள்  அத்துமீறி நுழைந்தமை, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 23  வயதுகளுடையவர்கள் எனவும் சந்தேக நபர்கள் கொகந்துர மற்றும் பொதுஹெர  பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினர்  மற்றும்  வீரம்புகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4