நலன்புரி அனுகூலங்கள் சபைக்கு உறுப்பினர்களை நியமிக்க பாராளுமன்ற பேரவையில் அனுமதி

Mayoorikka
3 years ago
நலன்புரி அனுகூலங்கள் சபைக்கு உறுப்பினர்களை நியமிக்க பாராளுமன்ற பேரவையில் அனுமதி

நலன்புரி அனுகூலங்கள் சபைக்கு உறுப்பினர்களை நியமிக்க நிதி அமைச்சரினால் பாராளுமன்ற பேரவைக்கு முன்வைக்கப்பட்டிருந்த முன்மொழிவுளுக்குப் பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய கே.எச்.ஜெசி முலர் மற்றும் கே. துனுசிங்க ஆகியோரை நியமிப்பதற்கு இவ்வாறு அனுமதி கிடைத்திருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

அதேநேரம், தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் காணப்படும் வெற்றிடத்துக்கு ஏ.எம்.நஹியாவை நியமிப்பது தொடர்பான பரிந்துரையை கௌரவ
ஜனாதிபதிக்கு மேற்கொள்வதற்கும் பாராளுமன்றப் பேரவை தீர்மானித்திருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பாராளுமன்றப் பேரவை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்றுக் கூடியபோதே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4