14 சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில்  5 இளைஞர்கள் கைது! 

Prathees
3 years ago
14 சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில்  5 இளைஞர்கள் கைது! 

பாதுக்க, பின்னவல பிரதேசத்தில்  சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த சம்பவத்தில்5 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக பாதுக்க காவற்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த சிறுமி  பாதுக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி 7ஆம் திகதி பாதுக்க பொலிஸில் சம்பவம் தொடர்பில் சிறுமியும் அவரது தாயும் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுமியின் வாக்குமூலத்தின்படி சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 5 இளைஞர்களிடம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 19, 20, 22 மற்றும் 27 வயதுடைய இளைஞர்கள்.

துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறும் சிறுமிக்கு 14 வயது 10 மாதங்கள் ஆகின்றன.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர், சிறுமி ஒரு இராணுவ சிப்பாய் ஒருவருடன் உறவில் இருந்ததாகவும், அந்த சிப்பாயால் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், வேறு ஒரு வாலிபருடன் அவருக்கு காதல் இருப்பது தெரியவந்தது.

குறித்த இளைஞன் கடந்த 3ஆம் திகதி குறித்த சிறுமியை பாதுக்க அருகவத்த பிரதேசத்தில் உள்ள வாழைத்தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

குறித்த இளைஞனின் நண்பர்கள் இருவர் கூட குறித்த இடத்திற்கு வந்துள்ள நிலையில் குறித்த இரு இளைஞர்களினால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

சிறுமியின் மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக அவிசாவளை சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4