கொழும்பில் கும்பல் ஒன்று தடிகளுடன் நுழைந்து கூரிய ஆயுதங்களால் தாக்கிய நிலையில் பொலிஸாரினால் கைது

Kanimoli
3 years ago
 கொழும்பில் கும்பல் ஒன்று தடிகளுடன் நுழைந்து கூரிய ஆயுதங்களால் தாக்கிய நிலையில் பொலிஸாரினால் கைது

 கொழும்பில் கும்பல் ஒன்று வாள்கள் மற்றும் தடிகளுடன் நுழைந்து ஒரு ஆண் மற்றும் அவரது சகோதரியை கூரிய ஆயுதங்களால் தாக்கிய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெமட்டகொட லக்கிரு செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மைத்திரி விகாரை வீதியில் 6 பேர் கொண்ட கும்பல் இரண்டு முச்சக்கரவண்டிகளில் வந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

சந்தேகநபர்கள் வந்த இரண்டு முச்சக்கரவண்டிகள், நான்கு வாள்கள், மூன்று மன்னா மற்றும் இரண்டு தடிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவத்தில் படுகாயமடைந்த 52 வயதுடைய நபரும் அவரது சகோதரியான 47 வயதுடைய பெண்ணும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் எனவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொரு குழுவினர் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான தகராறு காரணமாக இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளால் தாக்கியதில் இருந்து தனது சகோதரனை காப்பாற்ற முன்வந்த போது அவரது சகோதரி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் தெமட்டகொட, வெல்லம்பிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4