இலங்கை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தால் 5000 மெட்ரிக் தொன் அரிசி உதவி

Mayoorikka
3 years ago
இலங்கை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தால் 5000 மெட்ரிக் தொன் அரிசி உதவி

இலங்கை மாணவர்களுக்கு அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக, 5,000 மெட்ரிக் தொன் அரிசி சீனாவினால் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் சீன தூதுவர் Qi Zenhong ஆகியோர் கலந்துகொண்டனர்.

சீன மக்களின் நட்புறவின் மற்றுமொரு அடையாளமாக, இலங்கை மக்களுக்கு பிரதானமாக அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட பத்து இலட்சம் மாணவர்களுக்கு சீன அரசு அரிசி உதவி வழங்கவுள்ளது.

இந்த வேலைத்திட்டம் தெரிவு செய்யப்பட்ட 7,925 பாடசாலைகளில் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், இலங்கையிலுள்ள மொத்த பாடசாலைகளில் 78% பாடசாலைகளை இது உள்ளடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4