இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த உலக தலைவர்கள்

Prasu
3 years ago
இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த உலக தலைவர்கள்

நேற்று பிற்பகல் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உயிர் அமைதியாக பிரிந்தது. அந்த தகவலை லண்டன் பக்கிங்காம் அரண்மனை உறுதி செய்தது. தகவல் அறிந்ததும் இங்கிலாந்து மக்களும், உலக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். 

கொட்டும் மழையிலும் ஏராளமானோர் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டனர். ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டுவரப்படுகிறது. 

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் கடந்த 6-ந்தேதி பால்மோரல் அரண்மனையில் ராணி எலிசபெத்தை சந்தித்து தான் பிரதமராக தேர்வு பெற்றதை தெரிவித்தார். 

அதைத்தொடர்ந்து அவரை இங்கிலாந்து பிரதமராக ராணி எலிசபெத் முறைப்படி அறிவித்தார்.

வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராக இருந்தபோது இங்கிலாந்து ராணியாக பதவி ஏற்ற ராணி எலிசபெத், தனது பதவி காலத்தில் 17 பிரதமர்களை சந்தித்தவர் என்ற பெருமை பெற்றவர். 

இங்கிலாந்து ராணி மறைவுக்கு அந்நாட்டு பிரதமர் லிஸ் டிரஸ், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தை தொடர்ந்து, அவரது மகனான 73 வயது இளவரசர் சார்லஸ், மன்னராக பதவியேற்க உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4