ராணி எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் நியமனம்

Prasu
3 years ago
ராணி எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் நியமனம்

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், ராணி எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார். 

சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2005-ம் ஆண்டு கமிலா என்பவரை சார்லஸ் 2-வது திருமணம் செய்துகொண்டார். 

இங்கிலாந்தின் புதிய ராஜாவாக சார்லஸ் அரியணை ஏற உள்ள நிலையில் ராணியாக கமிலா அரியணை ஏறுகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4