ராணி எலிசபெத் மறைவு - நேபாள அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க முடிவு

#Queen_Elizabeth
Prasu
3 years ago
ராணி எலிசபெத் மறைவு - நேபாள அரசு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க முடிவு

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவால் காலமானார். 25வது வயதில் ராணியாக பதவியேற்ற எலிசபெத் ராணி சுமார் 70 ஆண்டுகாலம் ராணியாக பதவி வகித்துள்ளார். 

ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், நேபாள அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 12-ம் தேதி வரை துக்கம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நேபாள தூதரகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4