அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எம்.பி.க்கு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவிற்கு செல்லுமாறு மிரட்டல்

Prasu
3 years ago
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எம்.பி.க்கு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவிற்கு செல்லுமாறு மிரட்டல்

அமெரிக்காவில் ஆளும் கட்சியினுடைய எம்.பி யாக இருக்கும் 56 வயதிலேயே பிரமிளா ஜெயபால் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சென்னையில் பிறந்த இவருக்கு தொலைபேசியில் வெறுப்பூட்டத்தக்க வகையில் மிரட்டல்கள் வந்திருக்கின்றன. அதில் சொந்த நாட்டிற்கே திரும்பி செல்லுமாறு கூறப்பட்டிருக்கிறது.

அந்த ஆடியோ பதிவுகளை கடந்த வியாழக்கிழமை அன்று அவர் வெளியிட்டிருக்கிறார். அதில் ஆபாசமாகவும் பேசப்பட்டிருக்கிறது. மேலும் கடும் விளைவுகளை சந்திப்பீர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து இது குறித்து அவர் தன் டிவிட்டேர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, அரசியலில் இருப்பவர்கள், அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை வெளியில் கூற மாட்டார்கள்.

ஆனால், வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே தான் நான் இதை வெளிப்படுத்தினேன். இனவெறி மற்றும் பாலின வெறி ஏற்க முடியாதது என்று தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4