கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவுப் பொதி விநியோகம் மீண்டும் ஆரம்பம்

Mayoorikka
3 years ago
கர்ப்பிணித் தாய்மாருக்கான சத்துணவுப் பொதி விநியோகம் மீண்டும் ஆரம்பம்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா சத்துணவுப் பொதி விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

12 வாரங்கள் நிறைவடைந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 10 மாத காலத்திற்கு தலா 2 ஆயிரம் ரூபா மதிப்பிலான சத்துணவுப் பொதி வழங்கப்பட்டு வந்த நிலையில், உணவுப் பொருட்கள் சீராக கிடைக்காததால் கடந்த ஜூன் மாதம் முதல் விநியோகம் நிறுத்தப்பட்டது.

தற்போது பல மாவட்டங்களில் மீண்டும் போஷாக்கு பொதிகள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த சில வாரங்களில் நாடளாவிய ரீதியில் விநியோகம் மீள ஆரம்பிக்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4