இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதாக கூறி மனித கடத்தல்: பின்னணியில் இரண்டு அமைச்சர்கள்..?

Prathees
3 years ago
இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதாக கூறி மனித கடத்தல்: பின்னணியில்  இரண்டு அமைச்சர்கள்..?

இந்த நாட்டில் இருந்து இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதாக கூறி மனித கடத்தல் நடைபெறுவதாக அந்நாட்டில் உள்ள இலங்கை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

இஸ்ரேலில் துப்புரவு பணிக்கு விசா தருவதாக கூறி சுமார் 28 லட்சத்தை இவர்கள் பெறுவதாக கூறுகின்றனர்.

ஆனால் இலங்கையர்கள் எந்த சூழ்நிலையிலும் துப்புரவு தொழிலாளர்களாக இஸ்ரேலுக்குள் பிரவேசிக்க முடியாது என்று கூறும் அவர்கள், இந்த கடத்தலின் பின்னணியில் பணியகத்தின் தலைவர்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் சாக்கு மூட்டைகளில் பணத்தை எடுத்துச் செல்வதாகவும், இதன் பின்னணியில் இரண்டு அமைச்சர்கள் இருப்பதாகவும் அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4