எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்

Kanimoli
3 years ago
 எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்

 தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லாததால் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிவிட்ட அரசியல்வாதிகள் தற்போது மக்களின் வரிப்பணதில் சுகபோகம் அனுபவித்துக்கொண்டு மக்களின் வாழும் உரிமையை பறித்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை மக்களின் போராட்டங்களை அடக்கி ஆட்சியாளர்கள் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது என்பதோடு போராட்டம் ஒரு நாள் இந்த அரசாங்கத்தை அழித்துவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதங்களில் அரசுக்கு இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4