பிரித்தானியாவில் இந்து ஆலயம் மீது தாக்குதல் 46 பேர் கைது

Kanimoli
2 years ago
பிரித்தானியாவில் இந்து ஆலயம் மீது தாக்குதல் 46 பேர் கைது

நாட்டிற்கு தேவையான தேசிய தலைமைத்துவம் நாட்டில் தற்போது உள்ளது. அதுமட்டுமன்றி ரணில் விக்ரமசிங்கவை கண்டால் உலக நாடுகள் பயப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

சர்வதேச நிறுவனங்களின் தேவைகளை தோற்கடிக்க வேண்டுமாயின் இலங்கையர்கள் என்ற வகையில் ஓரணியில் திரள வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுயுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“உலகில் இந்தியர்கள், இந்தியர்கள் என்ற வகையில் ஒன்றிணைக்கின்றனர். ரஷ்யர்கள், ரஷ்யர்கள் என்ற வகையில் ஒன்றிணைக்கின்றனர்.

சீன மக்களும் தமது தேசிய அடையாளத்திற்காக ஒன்றிணைக்கின்றனர். இலங்கையர்களும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும்.

இந்த விடயத்தில் மக்கள் அரசியல் கட்சிகளுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிளும் இணைந்து தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்க அனைவரும் அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.

நாட்டிற்கு தேவையான தேசிய தலைமைத்துவம் நாட்டில் தற்போது உள்ளது. ரணில் விக்ரமசிங்கவை கண்டால் உலக நாடுகள் பயப்படும்.

ரணில் விக்ரமசிங்கவினால், ஒரு நாட்டை கையாண்டு அதனை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதை உலக நாடுகளின் தலைவர்கள் அறிவார்கள்” எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில் அந்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.