உலகிலேயே முதல் முறையாக குளோனிங் முறையில் உருவான ஓநாய் - சீன நிறுவனம் அசத்தல்

Prasu
3 years ago
உலகிலேயே முதல் முறையாக குளோனிங் முறையில் உருவான ஓநாய் - சீன நிறுவனம் அசத்தல்

சீன நாட்டின் சினோஜீன் நிறுவனமானது, ஆர்க்டிக் வகையை சேர்ந்த ஓநாயை, குளோனிங் முறை மூலமாக உருவாக்கியிருக்கிறது. அதற்கு மாயா என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. உலகிலேயே குளோனிங் மூலமாக முதல் முறையாக பிறந்த ஓநாய் இதுதான். கடந்த ஜூன் மாதம் பத்தாம் தேதி அன்று பெய்ஜிங் ஆய்வகத்தில் இந்த ஓநாய் பிறந்தது.

தற்போது 100 நாட்களாகியும் ஆரோக்கியமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கையாக ஒரு உயிரைப் போலவே வேறொரு உயிரை உருவாக்குவது தான் குளோனிங் முறை. கலவியில்லா இனப்பெருக்கம் தான் இந்த முறையின் அடிப்படையாகும். உலகிலேயே செம்மறி ஆடு தான் முதன் முதலில் இம்முறையில் உருவாக்கப்பட்டது.

தற்போது வரை பூனை, குரங்கு, எலி மற்றும் நாய் போன்ற விலங்குகள் இம்முறையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மனிதர்களை இந்த முறையில் உருவாக்குவதற்கு பல நாடுகள் தடை விதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4