அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ரஷ்ய தொடருந்து ஒன்று உக்ரைன் எல்லையில்

Kanimoli
3 years ago
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ரஷ்ய தொடருந்து ஒன்று உக்ரைன் எல்லையில்

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ரஷ்ய தொடருந்து ஒன்று உக்ரைன் எல்லையிலிருந்து 300 முதல் 400 மைல் தொலைவில் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த விடயத்தை உறுதி செய்துள்ள முன்னாள் பிரித்தானிய இராணுவ உளவுத்துறை அலுவலர் ஒருவர், அணு ஆயுத தாக்குதல் தொடர்பான தகவல்களை எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என்று கூறியுள்ளார்.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ரஷ்யாவுக்குச் சொந்தமான தொடருந்து ஒன்று உக்ரைனை நோக்கி வருவதைக் காட்டும் காட்சி ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த தொடருந்து , ரஷ்யாவின் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் படைப்பிரிவுக்குச் சொந்தமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயத்தை உறுதி செய்துள்ள முன்னாள் பிரித்தானிய இராணுவ உளவுத்துறை அலுவலரான Forbes McKenzie, மேற்கத்திய நாடுகளை எச்சரிப்பதற்காக ரஷ்யா இதைச் செய்திருக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்.

ஆனாலும், இப்படி அணு ஆயுத தாக்குதல் தொடர்பான தகவல்களை எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என்று கூறியுள்ளார் 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4