பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் யாழ் யுவதி - வெளியான அறிவிப்பு

Reha
3 years ago
பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் யாழ் யுவதி - வெளியான அறிவிப்பு

தென்னிந்த்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக தமிழில் பிக்பொஸ் நிகழ்ச்சியை வருடந்தோறும் வெற்றிகரமாக நடாத்திவரும் விஜய் தொலைக்காட்சி இந்த வருடமும் பிக்பொஸ் சீசன் 6 ஓரிரு தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் யார் யார் கலந்துகொள்ள்ப்போகின்றார்கள் என்ற பெயர் விபரங்கள் அவ்வப்போது இணையத்தளங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

ஆனாலும் அவை உத்தியோகபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை

இந்நிலையில் யாழ்ப்பாண யுவதி ஒருவரும் இப் பிக்பொஸ் நிகழ்ச்சியில் இம்முறை கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.
யூடியூப் சனல் மூலம் பிரபலமாகியிருக்கும் ஜனனி என்பவரே இவ்வாறு கலந்துகொள்ளவுள்ளார்.

ஆனால் இவர் தொடர்பில் தற்போது சமூகவலைத்தளங்களில் பற்பல விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இலங்கையிலிருந்து ஒரு பெண் பிக்பாஸ் நிகழ்ச்சி செல்கின்றார் என்ற உடன் சமூக வலைத்தளத்தில் இருக்கும் இந்த பெண்ணிய காவலர்கள் உருட்டும் உருட்டுக்கள்.
1) யாழ்ப்பாண மானத்தை கப்பலேத்த போயிட்டாள்
2) நாடு இருக்கிற நிலைமைல இது எல்லாம் தேவையா
3) லொஸ்லியா 2 
இதை விட பதிவு செய்ய முடியாத பல வக்கிரமான வார்த்தைகளை பதிவு செய்கிறார்கள். 

உங்களுக்கு எல்லாம் ஒரே ஒரு கேள்வி தான்.. 

அவர் அப்பிடி என்ன பிழை செய்து விட்டார். உங்கள் மனதில் இருக்கும் வக்கிரங்களை மற்றவர் மேல் சாயம் பூசாதீர்கள். திறமை உள்ளவர்கள் தங்களுக்கான வாய்ப்புக்களில் முன்னேறி  செல்ல விடுங்கள். 

யாரின் வாழ்க்கையையும், எவரின் முடிவுகளையும் விமர்ச்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. 

கடந்த சீசன்களில் ஒருமுறை இலங்கை தமிழ்ப் பெண் லொஸ்லியா உட்பட யாழ்ப்பாணத்திலிருந்து மொடலிங் துறையில் சிறந்து விளங்கிய தர்சனும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4