பிரித்தானியாவில் 4 சிறுவர்கள் மாயம் - பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Prasu
3 years ago
பிரித்தானியாவில் 4 சிறுவர்கள் மாயம் - பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

பிரித்தானியாவில் 4 சிறுவர்கள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை கண்டுபிடிக்க பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மேற்கு யோர்க்ஷயரில் நேற்றிரவு காணாமல் போன நான்கு சிறுவர்களும் தேடப்பட்டு வரும் நிலையில் அவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நால்வரில் ஒன்பது வயதுடைய ஒருவர், இன்று காலை காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைக் கண்டுபிடிக்க பொலிஸார் அவசரமாக முயன்று வருகின்றனர்.

மேற்கு யோர்க்ஷயர் பொலிசார் நால்வரும் எங்கிருந்து காணாமல் போனார்கள் என்பது குறித்த எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை, ஆனால் அவர்கள் கடைசியாக நேற்று இரவு 9.30 மணியளவில் அவதானிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

11 வயதான அனஸ்டாசியா ஹோர்வதோவா, 11 வயதான எடெல்லா கெசெலோவா, 9 வயதான அலெக்சாண்டர் கெசல்,  மற்றும் 13 வயதான டிபோர் லாக்கோ ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பதாக கருதப்படுகிறது. 

காணாமல் போன நால்வரும் நடுத்தர உயரம் கொண்டுள்ள நிலையில் நால்வரும் கருப்பு நிற உடையணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சிறுவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் 101 என்ற இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4