ராவல்பிண்டி அருகே அவசரமாக தரையிறக்கப்பட்ட இம்ரான் கானின் ஹெலிகாப்டர்

#Pakistan #ImranKhan
Prasu
3 years ago
ராவல்பிண்டி அருகே அவசரமாக தரையிறக்கப்பட்ட இம்ரான் கானின் ஹெலிகாப்டர்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சென்ற ஹெலிகாப்டர், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ராவல்பிண்டி அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவர் இம்ரான், டேரா இஸ்மாயில் கானிலிருந்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக செய்தி நிறுவனங்கள்  செய்தி வெளியிட்டுள்ளது.

ராவல்பிண்டி மாவட்டத்தின் அடியாலா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவாமி தலைவர் இம்ரான் கான்! தேரா இஸ்மாயில் கானில் இருந்து திரும்பியபோது அடியாலா அருகே ஒரு கிராமத்திற்கு அருகே ஹெலிகாப்டர் தரையிறங்கிய பிறகு உள்ளூர் மக்களுடன் தலைவர் இம்ரான் கானின் உரையாடல் என்று PTI பின்னர் ட்வீட் செய்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4