எமது பேரன்பிற்கு உரிய அன்பான உறவுகளே எங்களுக்காய் உங்களுடன் ஒரு சில நிமிடங்கள் நாங்கள் யார்?

Kanimoli
2 years ago
எமது பேரன்பிற்கு உரிய அன்பான உறவுகளே எங்களுக்காய் உங்களுடன் ஒரு சில நிமிடங்கள்  நாங்கள் யார்?

நாங்கள் ஒளிரும் வாழ்வு மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர். நாங்கள் அனைவரும் 
மாற்றுத்திறனாளிகள். நமக்காய் நாம் ஒன்றிணைந்து உருவாக்கிய அமைப்பே எமது 
அமைப்பாகும். புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உடப் ட்ட வகையில் செயற்பட்டு
வருகின்றோம் நாம் பிரதேச செயலகத்தில் வலிந்துதவு தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு
பிரதேச செயலாளரை போசகராகவும் சமூகசேவை உத்தியோகத்தரை ஆலோசகராகவும் கொண்டு 
2016ம் ஆண்டு 1மாதம் 03 திகதிமுதல் இயங்கி வருகின்றது. 
ஆரம்பித்து மிக குறுகிய காலத்திலேயே எமக்கான தனியான முகவரியுடன் கூடியதான
இடத்தினை ஏற்படுத்திக்கொண்டோம்  உடையார்கட்டு கிழக்கு, உடையார்கடடு; எனும் முகரியில்
இயங்கிவருகின்றோம் 
எமது சேவைகள் 
1. வாழ்வாதாரம் மற்றும் அத்தியாவசிய அபிவிருத்தி பணிகளின் கீழ் அமைப்புகள் 
தனிநபர்களின் உதவியுடன் இதுவரை 170 கிணறுகள், 42 இருக்கை மலசல கூடங்கள் 
நூற்றுக்கு மேற்பட்ட வாழ்வாதாரங்கள் என்பவற்றை வழங்கியுள்ளோம். 
2. செயற்கை அவயவங்கள் மற்றும் ஆதார உபகரணங்கள் திருத்தகம் ஊடாக 
அங்கங்களை இழந்தவர்களுக்கான செயற்கை உறுப்புக்களில் ஏற்படும் பழுதுகளைத் 
திருத்தி வழங்குகின்றோம் . அத்துடன் ஆதார உபகரணங்களான ஊன்று கோல்கள்,
சக்கர நாற்காலிகள் என்பவற்றை வழங்குவதுடன் சிறிய திருத்தங்களையும் மேற்கொணடு;
வருகின்றோம் 
3. அமுதசுரபி உணவு வழங்கல் செயற்திட்டம் ஊடாக நிரந்தரமாக நூற்றைம்பது 
பயனாளிகள் ( பராமரிப்பற்ற முதியர்கள், இளம் பெண்தலைமைக் குடும்பங்கள் மற்றும் 
இயங்கு நிலையற்ற மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு மாதாந்தம் உலர் உணவு 
வழங்கப்படுகின்றது. ஆத்துடன் அன்புக்குரியவர்களின் பிறந்த நாட்கள் திருமணநாட்கள்
நினைவு நாட்களை நினைவு கூர்ந்து அன்னதானம் வழங்கும் பணிகளும் 
நடைபெறுகின்றன. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!