புத்தளம் பகுதியில் 12 வயதுடைய மாணவி பலி

Kanimoli
2 years ago
புத்தளம் பகுதியில் 12 வயதுடைய மாணவி பலி

புத்தளம் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 12 வயதுடைய மாணவி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, காலைநேர வழிபாட்டிற்குரிய மணி ஒலித்ததும் மாணவி வகுப்பறையில் இருந்து மைதானம் நோக்கி ஓடியுள்ளார்.

இதன்போது தரையில் வீழ்ந்த மாணவி மயக்கமுற்ற நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றதும் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!