கொரோனா தொற்றால் சுவிஸ்சர்லாந்தில் வேலைக்கான வெற்றிடங்கள் அதிகரிப்பு
சுவிஸ்சர்லாந்திலே வேலைக்கான வெற்றிடங்கள் அதிகரித்து வருகின்றன. அதன் காரணம் அயல் நாட்டவர்கள் கொரோனா காலத்தில் வேலை செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்த கொரோனா நேரத்திலே வேலை இல்லாத போது தங்களுடைய நாடிற்கு திரும்பியதன் காரணத்தினால் சுவிஸ்சர்லாந்தது அரசும் அயல் நாட்டவர்களை அதிகம் வேலைக்கு எடுப்பதற்கும் அதற்கான அனுமதி வழங்குவதற்கும் சற்று தாமதம் மற்றும் தயக்கம் காட்டுவதனால் வேலை வெற்றிடங்கள் அதிகரித்து வருகிறது.
ஆனால் சுவிஸ்சர்லாந்திலே வாழுகின்ற பலர் வேலை இல்லாமல் இருந்த போதும் அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு அது அல்ல என்பதால் அதாவது அயல் நாட்டில் இருந்து வந்து சுவிஸ்சர்லாந்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் எதாவது ஒரு துறையில் பயிற்ச்சி பெற்றவர்கள் ,படப்படிப்பை முடித்தவர்களாக இருக்கின்ற காரத்தினால் சுவிஸ்சலாந்திற்கு உள்ளே இருப்பவர்கள் அந்த படப்படிப்பு இல்லாதவர்களை தாண்டி பட்டப்படிப்பு உள்ளவர்களுக்கு அதிக வேலை வெற்றிடங்கள் உள்ளது. உதாரணமாக சுவிஸ்சர்லாந்திலே விமானங்கள் வந்து இறங்கி திரும்பி செல்கிறதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. காரணம் அங்கே உள்ள வேலைக்கு ஆட்கள் இல்லாத பற்றாக்குறை என குறிப்பிடப்படுகின்றது.
அத்தோடு பெரிய பெரிய உணவகங்கள் விடுதிகள் போன்றவற்றில் அதிக சம்பள உயர்வுடன் வேலை வெற்றிடங்கள் நிலவுகின்றன. அதே வேளை ஆட்கள் பற்றாக்குறையால் நிறுவனங்களை மூடும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது அதை சுவிஸ் பத்திரிக்கை தொலைக்காட்சி ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றது.