பயங்கர விபத்தில் தாயும் மகனும் பலி: தந்தையும் மற்றுமொரு மகனும் வைத்தியசாலையில்

Prathees
3 years ago
பயங்கர விபத்தில் தாயும் மகனும் பலி: தந்தையும் மற்றுமொரு மகனும் வைத்தியசாலையில்

முச்சக்கர வண்டியொன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் பெண்ணொருவரும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ வலகும்புர பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணுக்கு 42 வயது மற்றும் அவரது மகனுக்கு 18 வயது.

இவர்கள் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த உயிரிழந்த பெண்ணின் கணவரும் மற்றுமொரு மகனும் காயமடைந்து பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4