விருச்சிக ராசிக்காரர்களுக்கு திருமணத்திற்குப் ஏற்ற ராசிகள்!

#wedding
Prasu
1 year ago
விருச்சிக ராசிக்காரர்களுக்கு திருமணத்திற்குப் ஏற்ற ராசிகள்!

பெரும்பாலும் தங்களின் நண்பர்கள் மற்றும் பிடித்தமான அவர்களுடன் நேரத்தை செலவிட விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு திருமணத்தில் எந்தெந்த ராசி நகர் மிகவும் பொருத்தமாக இருப்பார்கள் இவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய எந்த ராசியினர் மிகவும் பொருத்தமானவர்கள் ஆக இருப்பார்கள் என்பதை பார்ப்போம்.

விருச்சிக ராசியினர் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்தாலும் காதல் என்று வரும் போது மிகவும் ரொமான்டிக்கான வர்களாக மாறுவார்கள். இவர்கள் தங்களின் வேலையில் எப்படி தங்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்துகிறார் கிலோ நிறையுடைய காதல் என்று வரும் போது தன் காதலின் மீது மிகவும் அன்பாக நெருக்கமாக ரொமான்டிக்காக பழகுவார்கள். அப்படிப்பட்ட செவ்வாய் பகவான் ஆளக்கூடிய, நீர் ராசிகளில் ஒன்றான விருச்சிக ராசியினரின் விருச்சிக ராசியினருக்கு திருமணத்திற்கு ஏற்ற ராசியினர் யார் யார் என்பதை இங்கு பார்ப்போம்.

​கடக ராசி

விருச்சிக ராசியினரைப் போலவே அதிக உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள் கடக ராசியினர் . பார்க்க அமைதியாகவும் அதேசமயம் தன் மனதுக்குள்ளேயே அதிகமாக சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். கூச்ச சுபாவம் அதிகமாக இருந்தாலும் மற்றவர்களுக்காக ஓடிஓடி உதவக் கூடியவர்களாக இருப்பார்கள். கடக ராசிக்கும் விருச்சிக ராசியினரின் பொதுவான குணங்கள் அதிகமாக ஒத்துப்போகும் என்பதால், திருமணத்தில் இவர்களின் செயல்பாடு அந்நியோன்னியம் அதிகமாக இருக்கும்.

​மகர ராசி

விருச்சிக ராசியினர் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், கோபப்படக்கூடியவர்களாகவும் இருந்தாலும், மகர ராசியினர் அமைதியாக சிறப்பான செயல்களை செய்ய உந்துதலாக இருப்பார்கள். விருச்சிகராசியினரின் திறமையை நம்பமுடியாத அளவிற்கு இலட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்ல மகர ராசியினர் சிறப்பாக ஒத்துழைப்பார்கள். எனவே விருச்சிக ராசியினருக்கு திருமணத்திற்கு மகர ராசியினர் மிகவும் பொருத்தமாக இருப்பார்கள்.

மீன ராசி

மீன ராசியில் பிறந்தவர்கள் தனித்துவம் மிக்கவர்களாகவும், நகைச்சுவையானவர்களாகவும், மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்களாகவும் இருப்பவர்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் விருச்சிக ராசியினரின் அசாதாரணமான செயல்களைப் பாராட்டக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். அதனால் விருச்சிக ராசிக்கு திருமண உறவுக்கு பொருத்தமானவர்களாக மீன ராசியினர் இருப்பார்கள்.