நடிகை ரம்பா, குழந்தைகளுடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது கார் விபத்து!

Kanimoli
2 years ago
 நடிகை ரம்பா, குழந்தைகளுடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது கார் விபத்து!

இலங்கைத்தமிழரை திருமணம் செய்து கனடாவில் வாழும் பிரபல நடிகை ரம்பா, குழந்தைகளுடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது நடிகை ரம்பா கார் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, 90களில் ‘கனவு கன்னி’யாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனையடுத்து, 2019ம் ஆண்டு கனடா வாழ் யாழ்ப்பாண தொழிலதிபர் இந்திர குமார் பத்மநாதனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரம்பா. இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர் .

இந்நிலையில், குழந்தைகளுடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது நடிகை ரம்பா கார் விபத்துக்குள்ளானது. இத்தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை ரம்பா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் வழியில் எங்கள் கார் மற்றொரு கார் மீது மோதியது.

"நான் குழந்தைகளுடன் மற்றும் என் ஆயா" நாங்கள் அனைவரும் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறோம். என் குட்டி சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார்.

மோசமான கெட்ட நேரம். தயவு செய்து எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் ரம்பாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.       

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!