ஆர் ஜே பாலாஜி படத்தில் நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்

Nila
2 years ago
ஆர் ஜே பாலாஜி படத்தில் நடிகராக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்

 ஆர்ஜே பாலாஜி நடித்து வரும் படத்தின் பெயர் ‘சிங்கப்பூர் சலூன்’ என்பதும் இந்த படத்தை ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆர்ஜே பாலாஜி ஜோடியாக ஷிவானி ராஜசேகர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் இந்த படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர் இயக்குனராகவே இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!