நாட்டின் சில பிரதேசங்களில் இடைக்கிடை மழை பெய்யக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

Reha
1 year ago
நாட்டின் சில பிரதேசங்களில் இடைக்கிடை மழை பெய்யக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல பிரதேசங்களில் இடைக்கிடை மழை பெய்யும் என்று அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் இலங்கையின் வடக்கு கடற்கரையை ஒட்டியுள்ள தமிழகத்தை நோக்கி நகர அதிக வாய்ப்பு உள்ளது என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!