இலங்கையின் வரவு செலவுத் திட்டம் உலகத்தின் பார்வையில் யதார்த்தத்திற்குப் புறம்பானது: பொருளாதார பகுப்பாய்வு நிறுவனம் அறிக்கை

Mayoorikka
1 year ago
இலங்கையின் வரவு செலவுத் திட்டம் உலகத்தின் பார்வையில் யதார்த்தத்திற்குப் புறம்பானது:  பொருளாதார பகுப்பாய்வு நிறுவனம் அறிக்கை

தற்போதைய நிலைமை மற்றும் உலகின் சவால்களை கருத்தில் கொண்டு இலங்கையின் வரவு செலவுத் திட்டம் யதார்த்தமற்ற மற்றும் பகுத்தறிவற்ற வரவு செலவுத் திட்டம் என்று பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருளாதார பகுப்பாய்வு நிறுவனம்  கூறுகிறது.

தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இவ்வருட வரவுசெலவுத் திட்டம் எந்தளவுக்கு உதவும் என்பது பிரச்சினைக்குரியது என அதன் ஆய்வுப் பணிப்பாளர் சுபாஷினி அபேசிங்க தெரிவித்துள்ளார்.
 
கடந்த வரவுசெலவுத் திட்டத்தைப் போன்று தற்போதைய வரவு செலவுத் திட்டத்தையும் தவறவிடாமல் பராமரிக்க அதிகாரிகள் பாடுபட வேண்டும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.
 
இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் வரி மூலம் கிடைக்கும் வருமானத்தை உரிய முறையில் செலவழிக்கும் முறைகள் உள்ளடக்கப்படவில்லை என பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ளும் வெரிட்டி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுப் பணிப்பாளர் சுபாஷினி அபேசிங்க மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!