நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சியாளர்களே காரணம் - மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க

Kanimoli
1 year ago
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சியாளர்களே காரணம் - மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சியாளர்களே காரணம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மாத்தறை ராகுல கல்லூரியின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை அறிவுள்ளவர்கள் நிர்வகித்திருந்தால் நாடு இவ்வாறானதொரு நெருக்கடியில் சிக்கியிருக்காது.தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்படும் கடினமான தீர்மானங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புவதாகவும் ஆளுநர் கூறினார்.

தகுதியானவர்களுக்கு சரியான இடம் கிடைத்தால் தான் வளர்ந்த நாடுகள் வளரும். இல்லாவிட்டால், தனக்கு உரிய இடம் கிடைக்காத திறமைசாலி, தன் திறமைக்கேற்ப போட்டி போட்டு முன்னேற முடியாத சமூகத்தில் இருந்தால் அது வெற்றியாக கருதமுடியாது.

மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். நாங்கள் மிகவும் கடினமான காலங்களில் இருக்கிறோம்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது எளிதல்ல. இதற்கு கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!